தமிழ்
ஆரிய மத வேறுபாடு
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆய்வு
வேதக்காலம்
தமிழம்
- சிறுதெய்வ வணக்கமும் பெருந்தேவ மதமும் கடவுள் சமயமும்.
- இல்லத்திலும் கோவிவிலும் உருவ வழிபாடும் எங்கும் உருவிலா வழிபாடும்
- தமிழக் குருக்கள்
- தமிழ் வாயில்
- மறுமையில் நல்வாழ்வும் விண்ணுலகப் பேறும் வீடுபேறும்
- வாய்மையால் தூய்மை
- மக்கள் நல்லொழுக்கத்தாலும் செங்கோலாட்சியாலும் மழையெனல்
ஆரியம்
- பல் சிறுதெய்வ வணக்கம்
- வீட்டிலும், வெளியிலும் வேள்வி வளர்த்தல்
- பிராமணக் குருக்கள்
- வேத மந்திர வாயில்
- மறுமையில் விண்ணுலப் பேறு
- நீரால் தூய்மை
- வேள்வியால் மழையெனல்
முத்திருமேனி /
இந்துமதக் காலம்
தமிழம்
- சிவ வழிபாடு / திருமால் வழிபாடு/ கடவுள் வழிபாடு
- சிவன் முத்தொழில் தலைவன் / திருமால் முத்தொழில் தலைவன் எனல்.
- தமிழ் வழிபாடு ஆரியரால் நீக்கப்பட்டது.
- தமிழக் குருக்கள் கோயில் வழிபாட்டுத் தொழிலினின்று விலக்கப்பட்டனர்.
- தேங்காய் பழம் படைத்தல்.
- துறவறமும் வீடுபேறும் எல்லார்க்கும் உரியன
- இல்லறம் துறவறம் என வாழ்க்கைநிலை எல்லார்க்கும் இரண்டே
- இல்லறத்தாலும் துறவறத்தாலும் வீடுபேறு
- ஒழுக்கத்தாற் சிறப்பு
- தமிழும் தேவமொழி யெனல்
- ஏழைகள் எல்லாம் தானம் பெறற்குரியர்
- கல்வி எல்லார்க்கும் பொது
- நாற்குலம் தொழில்பற்றிய பாகுபாடு
- கொலைத்தண்டம் எல்லாக் கடுங் குற்றவாளிகட்கும் பொது
- தமிழிலும் மறையுண்டு
- எல்லா மொழியும் இறைவனுக்கு ஏற்கும்
ஆரியம்
- முத்திருமேனி வழிபாடு
- நான்முகன், திருமால், உருத்திரன் (சிவன்) ஆகிய மூவரும் முறையே படைப்பும் காப்பும் அழிப்பும் செய்பவர் எனல்
- ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் வழிபாட்டு வாயில்
- பிராமணக் குருக்கள்
- தீ வளர்த்தல்
- துறவறமும் வீடுபேறும் பிராமணர்க்கே உயியன
- மாணவம் (பிரமசாரியம்), இல்வாழ்க்கை (கிருகசுதம்), காடுறைவு ( வானப்ரசுதம்), துறவு ( சந்நியாசம்) எனப் பிராமணன் வாழ்க்கை நிலை நான்கு.
- துறவறத்தால் மட்டும் வீடுபேறு
- பிறப்பால் சிறப்பு
- சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி எனல்.
- பிராமணரே தானம் பெறற்குரியவர்
- கல்வி பிராமணனுக்கே சிறப்பு
- நால்வரணம் இறைவன் படைப்பு
- கொலைத்தண்டம் பிராமணனுக்கு இல்லை.
- ஆரியத்தில்தான் வேதம் உண்டு
- சமற்கிருதம் ஒன்றே இறைவனுக்கு ஏற்றது
தொகுப்பு/ஆக்கம் : அ.பன்னீர்ச்செல்வம் மலேசியா.
மூலம் : தமிழ் மதம், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்