Monday, May 16, 2011

என் திருக்குறள்



``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ் ``

நான் மதிக்கும் என் பெரியவர்கள் திருவள்ளுவருக்கும், வள்ளலாருக்கும், மறைமலை அடிகளாருக்கும், பாவாணருக்கும் மற்றும் தந்தை பெரியாருக்கும் என் மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் முன்வைக்கிறேன்.``கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முந்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி'' எனும் உண்மை வரலாற்றை தம் ஆய்புல அறிவால் அகழ்ந்து காட்டியவர் ‘மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர். உலக முதன்மொழி தமிழ் மொழி. இம்மொழியின் சிறப்பு எண்னில் அடங்கா. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுத்து இலக்கணச் செறிவும், இலக்கிய வளமும், சீரிளமைத் திறனும் குன்றாமல் இன்றளவும் நின்று நிலவுவது தமிழ்மொழியே. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது எக்காலத்திற்குமேற்ற ஒப்புயர்வற்ற உலகப் பொது வாழ்வியல் மறை. மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். வள்ளுவன் என்பது தமிழ் பெயரே, வள்ளுவன் என்பது குலப்பெயரேயென்றும்,அது நிமித்திகனையும் குறிக்கும்மென்றும்,உபகாரி யென்னும் பொருளில் வாரதென்றும் அறிந்துகொள்க. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூ¡¢ல் வசித்தவர் என்றும் தொ¢கிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் (இதற்கு காரணம் அப்போழுது பின் வாசலின் வழி வந்து தமிழையும், தமிழரையும், தமிழ் பண்பாட்டையும் அழிக்க நினைத்த ஆரிய வழி பார்ப்பணரே), முடிவில் ஒளவையா¡¢ன் துணையோடு அரங்கேற்றியதாகவும் அறிகிறோம். திருவள்ளுவரை செந்நாப்புலவர்,செந்தாப்போதார், திருத்தகு,தெய்வத், திருவள்ளுவர், தெய்வத் திருவள்ளுவர், தெய்வப் புலமைத் திருவள்ளுவர், தெய்வப்புலவர், தேவர்,  தேவர்திருவள்ளுவர்,தேவிற்சிறந்த திருவள்ளுவர், நாயனார், புலவர், பெருநாவலர்,பொய்ய,மொழியார், பொய்யில்புலவர், மாதாநுபங்கியார்,முதற் பாவலர்,வள்ளுவ,தேவன்(ர்), வள்ளுவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சா¢யாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2050 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும். சிலர் திருவள்ளுவர் ஒரு குறளை இயற்ற ஓர் ஆண்டு எடுத்துக்கொண்டர் என கூறுகிறார்கள். அப்படியானல் அவர் வாழ்ந்த காலம் உண்மையில் எவ்வளவு? உண்மையில் அவர் பிறந்தது கடைச் சங்கக் காலத்தில்தான? கிரு.துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர். பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன. அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு, பதினென்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வா¢சையில் "முப்பால்" என்னும் பெயரோடு ந்நூல் விளங்குகின்றது. "அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது. "பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன. கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். மொத்த அதிகாரதின் எண்னின் கூட்டுத் தொகை 7, அதாவது 1+3+3=7. மொத்த குறள்களின் எண்னிக்கையின் கூட்டுத் தொகையும் 7, அதாவது 1+3+3+0=7. ஒவ்வொரு குறள்களிலும் மொத்த எழுத்துக்களின் எண்னிகையும் 7. ஆக 7 எனும் எண்னில் நமது தெய்வப்புலவர் ஒரு மிக பெரிய இரகசியத்தை வைத்துள்ளார். சிந்தியுங்கள்.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம், அறம், இரண்டு, உத்தரவேதம், எழுதுண்டமறை, குறள், திருவள்ளுவப் பயன், திருவள்ளுவர், தெய்வமாமறை, நம் மறை, பழமொழி, பால்முறை, புகழ்ச்சி நூல், பொருளுரை, முதுநெறி, முதுமொழி, முப்பொருள், மெய்வைத்தசொல், வள்ளுவ தேவன் வசனம், வள்ளுவம், வள்ளுவ மாலை, வள்ளுவர் வாய்மொழி, வள்ளுவர் வைப்பு, வள்ளுவன் வாய்ச்சொல், வாய்மை, வாயுறை வாழ்த்து என்ற பெயர்கள் அதற்கு¡¢யவை. பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை, மு.வரதராசனர் உரை, மு. கருணாநிதி உரை, சலமன் பாப்பையா உரை மற்றும் நான் போற்றும் மொழிஞாயிறு பாவாணரின் திருக்குறளின் மரபுரை. தனிமனிதனுக்கு உ¡¢மையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு. ஒரு மனிதன் அனைத்தையும் அறிய வேண்டுமானால் அவன் இறைமையை அடைய வேண்டும். மனித நிலை வாழ்க்கையில் அதனை உணர முடியாது கடினம். அதனை உணர வேண்டுமானால் அந்த இறைமையை அடைந்து விட வேண்டும். ஆனால் அந்த இறைமை நிலையை அடைந்த திருவள்ளுவரே, இறைமை நிலையில் தான் கண்ட அனைத்து விவரங்களையும் கீழ் இருக்கும் மனித நிலைக்கு குறட்பாக்களின் மூலம் நமக்கு புரிய வைத்தார்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் 9 இந்திய மொழிகளிலும், 5 ஆசிய மொழிகளிலும், 11 ஐரோப்பிய மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் இந்தியர் பத்தொன்பதின்மரும் ஆங்கிலர் பதின்மருமாக முப்பத்திருவர் மொழிபெயர்த்துள்ளனர். உலகமே போற்றும் மாமனிதன் மகாத்துமா காந்தி. அந்த மகாத்துமா காந்தி தன் வாழ்க்கையில் தன்னுள் அன்பும் கருணையும் வருவதற்குத் தன் ஆசான் இரச்சியாவில் உள்ள மாமேதை தொல் சிடொய் என்றார். மாமேதை தொல் சிடொய் அவரிடம் சென்று, தங்களின் வாழ்க்கையில் அன்பும் கருணையும் வருவதற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் என்னவென்றால், ‘என்னுடைய வாழ்க்கையில் அன்பும் கருணையும் உருவெடுத்ததற்குக் காரணம் இந்தியாவில் தென் பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் உருவான திருவள்ளுவரின் குறள்களைப் படித்த பிறகுதான் என் வாழ்வில் ஒளி வந்தது' என்றார்.
இவ்வகையான சிறப்பு மிக்க திருக்குறளை நாம் மறக்கலாமா? கூடாது கூடாது! அதில் உள்ள கருத்துகள் மனித வளர்ச்சிக்கு பல வகையில் துணை புரியும். இதனை கருத்தில் கொண்டுதான் நமது நாட்டில் தொடக்க நிலைத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் சுமார் 30 தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களை இணைத்துள்ளனர். அந்த 30 குறள்கள் யாவை? மற்றும் அவை உணர்த்து கருத்துகள் என்ன என்பதை இந்த இடுபணியில் காணலாம்.

“மனிதனை மனிதன் ஆக்குவது திருக்குறள்”

“மனிதனை தெய்வம் ஆக்குவது திருக்குறள்''